சினிமா

செம கூட்டணி. மாஸ் அடிக்கும் தகவல்; அறிவிப்பு எப்போ

54views

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் நயன்தாராவை வைத்து ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தை இயக்கியதன் மூலம் திரைத்துறையில் இயக்குனராக தடம் பதித்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய டார்க் காமெடி படமான ‘டாக்டர்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது.

இவர் தற்பொழுது நடிகர் விஜயை வைத்து ‘பீஸ்ட்’ என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், இந்த திரைப்படம் எப்போது ரிலீசாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த ‘அண்ணாத்தே’ படம் திரையரங்குகளில் ரிலீசாகி ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தியது. அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு பின்னர் ரஜினி அடுத்த படத்திற்காக காத்துக்கொண்டிருந்த நிலையில், இவரை வைத்து அடுத்த படங்களை இயக்கப்போவதாக பல இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டு வந்தது. அந்த வகையில் தற்போது இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர் ரஜினியின் கூட்டணியில் புதிய படம் உருவாக போவதாக செய்திகள் வெளியானது.

அந்த வகையில் இந்த படம் நடிகர் 169-ரஜினிக்கு வது படமாக அமைய போகிறது. மேலும் இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!