தமிழகம்

சென்னை வங்கி கொள்ளை; முக்கிய குற்றவாளி முருகன் சரண்

93views
அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட முருகன் என்பவர் கொரட்டூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் நேற்று முன்தினம் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டபகலில் நடந்த இந்த கொள்ளை குறித்து அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் அங்கு சென்று விசாரணை நடத்திய போது, வங்கி கிளை காவலாளி மற்றும் மேலாளர், அங்கு பணியாற்றும் பெண் ஊழியர் ஆகியோருக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து இந்த கொள்ளை அரங்கேறியது தெரியவந்தது.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வங்கியின் முன்னாள் ஊழியரான முருகன் என்பவர் இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை குற்றவாளிகள் என நிர்ணயித்து தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். வங்கி ஊழியர் முருகன், அவரது கூட்டாளிகள் தற்போது கைதாகி உள்ள பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் மற்றும் தலைமறைவாக உள்ள சூர்யா மேலும் ஒருவர் என காவல்துறை விசாரணையில் வெளிவந்துள்ளது.
கொள்ளை வழக்கில் இதுவரை பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 18 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. 14 கிலோ இன்னும் மீட்கப்பட்டவில்லை. தலைமறைவாக முருகனை பிடிக்க சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களை சுற்றியுள்ள 20 சோதனை சாவடிகள் போலீசார் உஷார்படுத்தப்படுத்தி தீவிர வாகன சோதனை நடந்து வந்தது.
இந்நிலையில் இந்த வங்கி கொள்ளையில் முக்கியான முருகன் சென்னையை அடுத்த கொரட்டூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!