அசைவம்

சுவையான சிக்கன் பிரியாணி செய்வது எப்படி ?

401views

தேவையான பொருட்கள்

ஒரு கிலோ சீரக சம்பா அரிசி அல்லது பாஸ்மதி அரிசி
1கிலோ சிக்கன்
4வெங்காயம்
3தக்காளி
5பச்சை மிளகாய்
2டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1/2கப் புதினா
2 கப் கொத்தமல்லி இலை
4 டேபிள்ஸ்பூன் நெய்
50 எம்எல் சமையல் எண்ணெய்
2 டீஸ்பூன் கரம் மசாலா
3 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
1டீஸ்பூன் மஞ்சள் தூள்
உப்பு தேவையான அளவு
முந்திரிப்பருப்பு சிறிதளவு
உலர் திராட்சை சிறிதளவு
3பிரிஞ்சி இலை
ஏழு கிராம்பு
7 ஏலக்காய்
ஒரு துண்டு பட்டை
3 டேபிள் ஸ்பூன் தயிர்
2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு

செய்முறை

முதலில் அரிசியை நன்கு கழுவி 20 நிமிடங்கள் வரை ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும் பின்பு சிக்கனை வெட்டி நன்கு கழுவி எடுத்து அதனோடு 3 டேபிள் ஸ்பூன் தயிர் ஒரு டீஸ்பூன் கரம்மசாலா ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சிறிதளவு உப்பு மஞ்சள் சிறிதளவுசேர்த்து நன்கு கலந்து அதை 20 நிமிடங்கள் மூடி வைக்கவும் பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு உலர்திராட்சை முந்திரிப்பருப்பை பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்அதே நெய்யில் 50 எம்எல் சமையல் எண்ணெய் சேர்த்து அதில் பிரிஞ்சி இலை ஏலக்காய் பட்டை கிராம்பு சேர்த்து பொறிக்கவும் பின்னர் அதோடு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்பின்னர் அதோடு இஞ்சி பூண்டு விழுது புதினா இலை கொத்தமல்லி இலை தக்காளி சேர்த்து நன்கு கிளறிவிட்டு அதை மூடி வைத்து வேகவிடவும் தக்காளி நன்கு வெந்ததும் அதனுடன் தேவையான அளவு மிளகாய்த்தூள் சேர்த்து கிளறிவிடவும்பின்னர் அதோடு சிக்கனை சேர்த்து நன்கு கிளறிவிட்டு 5 நிமிடங்கள் மூடி வைக்கவும் பின்னர் அரிசி அளந்த அந்த கப்பில் இரு மடங்கு தண்ணீர் சேர்க்கவும்தண்ணீர் நன்கு கலந்து விட்டு மூடி வைக்கவும் தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊற வைத்திருக்கும் அரிசியை அதோடு சேர்க்கவும்அரிசியை சேர்த்து நன்கு கிளறி விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வேக வைக்கவும் கடைப்பிடித்து விடாதபடி அடிக்கடி கிளறி விட்டுக் கொள்ளவும்,80 விகிதம் அரிசி வெந்ததும் தண்ணீர் வற்றி விடும் அந்த நேரத்தில் நன்கு கிளறிவிட்டு அலுமினியம் ஃபாயில் மேல் சுற்றி அல்லது ஒரு தட்டினால் நன்கு மூடி அதன்மேல் ஒரு பொருளை வைத்து அடுப்பை நன்கு குறைத்து 15 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும் 15 நிமிடங்களுக்கு  பின் பதமாக அரசி வந்து பிரியாணி தயாராகி விட்டது அதன் மேல் கொத்தமல்லி இலை பொரித்து வைத்திருக்கும் முந்திரி பருப்பு உலர் திராட்சையை தூவி இறக்கி விடவும்.

இப்பொழுது அருமையான மிகவும் சுவையான சிக்கன் பிரியாணி தயாராகி விட்டது,இந்த பிரியாணியுடன் ரைத்தா சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!