சுவிட்சர்லாந்து அரசு, ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தியவர்கள், கொரோனா சான்றிதழ் பெற முடியாது என்று உறுதியாக தெரிவித்திருக்கிறது.
பிரிட்டன் மக்கள், அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி செலுத்தியிருப்பதால் சுவிட்சர்லாந்திற்கு பயணம் மேற்கொள்ள முடியாது என்று வருத்தமடைந்துள்ளனர். இந்நிலையில் நாட்டின் சுற்றுலாவிற்கான பிரதிநிதி தெரிவித்திருப்பதாவது, ஐரோப்பாவில் இருக்கும் பல்வேறு நாடுகளை போன்று சுவிட்சர்லாந்திலும், வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதியிலிருந்து உணவகங்கள் மற்றும் அனைத்து இடங்களுக்கும் செல்ல கொரோனா சான்றிதழ் கட்டாயம் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது, சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கொரோனா சான்றிதழ் பெறுவதற்கு, ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் செலுத்திய மக்களுக்கு அனுமதி இல்லை.