247
வேறுபாடு என்பது பகுத்தறிதலில் பயன்படும் நோக்கு ஆயினும் ஏற்றத் தாழ்வுகள் என்ற ஒரே அடிப்படையில் பிரித்தறியப்படுகிறது என்பதை ஆணித்தரமாகச் சொல்லலாம்.
மனிதன் என்ற சொல் அல்லது உடல் அல்லது உணர்வு எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். முதலில் ஆண், பெண் என்று உடலமைப்பு வேறுபடுத்திக் காட்டியதை ஆதிக்கம் மற்றும் அடக்குமுறையில் தன்னை உயர்வாகக் காட்டியது ஆணினம்.
அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பெண் தன்னை வெளிக்கொணர உறுதுணையாக இருந்தது முற்போக்குக் கருத்துடைய ஆண்களும்தான் என்பது மறுப்பதற்கில்லை.
சமூக அமைப்பு சாதீய அடிப்படையில் பிரித்து வைத்ததை கல்வியைக் கொண்டு சமநிலையாக்க முயன்றாலும் அங்கும் ஏற்றத் தாழ்வுகள் வசதி படைத்தவர்களுக்கென தனியார் பள்ளிகள் ஏழைகளுக்கென அரசாங்கப் பள்ளிகள். இப்படித்தானே தொடர்கிறது ஏதாவது ஒரு ரூபத்தில் நீ பெரியவன் நான் பெரியவன் என்ற போட்டிகளும் பொறாமைகளும் வரவே ஒற்றை உலகின் கீழ் பலகூட்டுப் பறவைகள் நான் முந்தி நீ முந்தியென பறந்துகொண்டிருக்கின்றன .தனிப்பட்ட இலக்குகள் என்பதைவிட வெல்லுதல் என்பதே ஒரே குறியாகிறது.
போட்டி உலகில் போராடுவதற்கென்றே காரணமென ஏதாவதொன்று இருந்துகொண்டே தான் இருக்கிறது அப்போதும் இப்போதும்.
-
கனகா பாலன்
add a comment