419
பெற்றோர்கள் கவனித்துக்கொள்வார்கள் என்று மிதப்போடு தனக்கென்று ஒரு குடும்பம் ஆகும் வரையிலும் கூட சில பிள்ளைகள் வீட்டுச் சுமைகளில் பங்களிப்பு செய்வதில்லை.
அப்படியே பணிக்குச் சென்றாலும், ஏதோ ஹோட்டலில் தங்கியிருப்பது போல”இந்தா, என் சாப்பாட்டுக்குக் காசு, இனி எதுவும் கேட்கக் கூடாதென்று “சட்டமாகப் பேசிவிட்டு தன் விருப்ப வாழ்விற்கு எந்தக் காரணங்கொண்டு பெற்றோர்கள் இடையூறு ஏற்படுத்தா வண்ணம் கவனமாக இருந்து கொள்கிறார்கள்.
தலா இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட நிரந்தர நோய்களோடு பெற்றோர்கள் இருந்தாலுங்கூட “நான் உனக்கு சின்ன வயசுல நல்லாப் பார்த்துக்கிட்டேன்ல , இப்போ நீ எங்களுக்கு செஞ்சே ஆகவேண்டும் என்று மல்லுக்கு நிற்பதில்லை”. அவர்கள்.
“நீ நல்லா இருந்தாப் போதும் “என்று ஆசிர்வதிக்கும் வார்த்தைகளை மனப்பூர்வமாக தன் மக்களுக்கு வழங்கிவிட்டு,என்றோ? எதற்கோ பழகிவைத்திருந்த கைத்தொழிலை கையிலெடுத்து. தன் முதுமைக்கால வாழ்வுக்கு ஜீவனாம்சமாக்கிக் கொள்கிறார்கள் இன்றளவும் இருக்கும் படிப்பின் வாசம் அறியா கிராமத்து முதுமையர் பலர்.
கனிவும், கருணையும், ஊட்டி வளர்த்தவர்களின் உயிர்சொத்தென்று சொன்னால் கூட பொருந்துமோ?
-
கனகா பாலன்
add a comment