குடிசை சீரமைப்பு திட்ட மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் சஞ்சய் ராவத்தை கைது செய்தனர். மேலும் அவர்கள் நடத்திய சோதனையில் சஞ்சய் ராவத் வீட்டில் இருந்து ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் கைது நடவடிக்கை தொடர்பாக சஞ்சய் ராவத்தின் தம்பியும், விக்ரோலி தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ.வுமான சுனில் ராவத் கூறியதாவது:- சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மீதான கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறைக்கு எதிராக சிவசேனா தொண்டர்கள் போராட்டம் நடத்துவார்கள்.
சிவசேனாவும், உத்தவ் தாக்கரேவும் எங்களுக்கு பின்னால் உறுதியாக நிற்கிறார்கள். சஞ்சய் ராவத் கைது தொடர்பாக எங்களின் சட்டப்போராட்டம் தொடங்கிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.