விளையாட்டு

சிகாகோ ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் முகுருசா

85views

அமெரிக்காவில் நடைபெறும் சிகாகோ ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசா தகுதி பெற்றார். காலிறுதியில் ஜப்பானின் மெய் ஹோன்டமாவுடன் (200வது ரேங்க்) மோதிய முகுருசா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 40 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு காலிறுதியில் முதல் நிலை வீராங்கனை எலினா ஸ்விடோலினாவுடன் (உக்ரைன்) மோதிய ஆன்ஸ் ஜெபர் (16வது ரேங்க், துனிசியா) 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

எலனா ரைபாகினா (கஜகஸ்தான்), மார்கெதா வொண்ட்ருசோவா (செக்.) ஆகியோரும் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!