‘சாணிக்காயிதம்’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார் செல்வராகவன்.
இயக்குநர் செல்வராகவன் அருண் மாதேஸ்வரனின் ‘சாணிக்காயிதம்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘சாணிக்காயிதம்’ படத்தை இயக்கும் அருண் மாதேஸ்வரன் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தயாரித்துள்ள ‘ராக்கி’ படத்தையும் இயக்கி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், ‘சாணிக்காயிதம்’ படம் நிறைவடைந்ததாக அறிவித்தது படக்குழு.
அதனைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் டப்பிங் பணிகளை துவக்கிய செல்வராகவன், தற்போது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு டப்பிங் பணிகள் நிறைவடைந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் செல்வராகவன். ‘சாணிக்காயிதம்’ விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் தெவிக்கின்றன.