வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ‘டி-20’ போட்டியில் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியது.வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது.
முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி நேற்று செயின்ட் கிட்சில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு ரோகித் சர்மா, சூர்யகுமார் ஜோடி துவக்கம் கொடுத்தது.
மெக்காய் வீசிய முதல் பந்தில் ரோகித் (0) அவுட்டானார். சூர்யகுமார் 11, ஸ்ரேயாஸ் 10 ரன் மட்டும் எடுத்தனர். மெக்காய், ஸ்மித் பந்துகளில் சிக்சர் விளாசிய ரிஷாப் (24) நிலைக்கவில்லை. பின் இந்திய அணியின் ரன் வேகம் குறைந்தது.
6.2 ஓவரில் 61/3 ரன் எடுத்த இந்திய அணி, 10 ஓவரில் 75/4 ரன் மட்டும் எடுத்தது. மெக்காய் ‘6’ஸ்மித் பந்தில் ஹர்திக் பாண்ட்யா சிக்சர் அடிக்க, இந்தியா 13 ஓவரில் 101/4 ரன்களை எட்டியது. இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா (31) அவுட்டாக, ஜடேஜாவுடன் இணைந்தார் தினேஷ் கார்த்திக். கடைசி நேரத்தில் ரன் எடுக்க வேண்டிய நிலையில் ஜடேஜா (27) அவுட்டானார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் (7) ஏமாற்றினார். அஷ்வின் (10), புவனேஷ்வர் (0) நீடிக்கவில்லை. இந்திய அணி19.4 ஓவரில் 138 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீசின் மெக்காய், 6 விக்கெட் சாய்த்தார்.
கிங் அதிரடி:எளிய இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் அதிரடி துவக்கம் தந்தார். மேயர்ஸ் (8 ரன்), கேப்டன் பூரன் (14 ரன்), ஹெட்மயர்ஸ் (6 ரன்) வரிசையாக நடையை கட்டினர். இருப்பினும் டேவன் தாமஸ் (31* ரன்) உடன் இணைந்த கிங் (68 ரன்) அரைசதம் விளாசி அவுட் ஆனார். ரோமன் பவல் (5 ரன்) நிலைக்கவில்லை.
முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் 1-1 என சமன் செய்தது. இன்று (ஆக.,2) 3வது டி20 போட்டி நடைபெறுகிறது. ‘லக்கேஜ்’ தாமதம்நேற்று போட்டி இரவு 8:00 மணிக்கு துவங்க இருந்தது.
டிரினிடாட்டில் இருந்து வீரர்களின் விளையாட்டு பொருட்கள் அடங்கிய ‘லக்கேஜ்’, செயின்ட் கிட்ஸ் வந்து சேர தாமதம் ஆனது. இதனால் மூன்று மணி நேரம் தாமதமாக போட்டி துவங்கியது.முதன் முறையாஇந்தியா பங்கேற்கும் போட்டிகள் ‘லக்கேஜ்’ பிரச்னையால் பலமுறை பாதிக்கப்பட்டன. 1984, அக்., ல் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோத இருந்த போட்டி ஜாம்ஷெட்பூரில் நடக்க இருந்தது. ‘லக்கேஜ்’ வருகை தாமதத்தால் இப்போட்டி ரத்து செய்யப்பட்டது.* 1994ல் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஒருநாள் போட்டி விசாகப்பட்டனத்தில் நடந்தது. அப்போது வீரர்கள் ‘லக்கேஜ்’ தவறுதலாக சென்னைக்கு அனுப்பப்பட்டது. இதனால் தாமதம் ஏற்பட, ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடந்தது.