தமிழகம்

கோவையை சேர்ந்த பைக் ரைடர் டிடிஎஃப் வாசன் மீது சென்னை காவல்துறையில் புகார்

129views
கோவையைச் சேர்ந்த டி.டி.எஃப் வாசன் 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்து, அவற்றை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவரது யூடியூப் சேனலை 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு டிடிஎஃப் வாசன் பிறந்தநாளை முன்னிட்டு மேட்டுப்பாளையம் அருகே அன்னூரில் ரசிகர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், டிடிஎஃப் வாசனை போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர். இதனிடையே, சூப்பர் பைக்கில் மணிக்கு 247 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற வீடியோவை அவர் தனது யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இளைஞர்களுக்கு தவறான முன்உதாரணமாக டிடிஎஃப் செயல்படுவதாக சென்னை காவல்துறை சமூகவலைதள பக்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவம் நிகழ்ந்த பகுதி சென்னை காவல்துறைக்கு உட்பட்டது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த சென்னை காவல்துறை, சம்பந்தப்பட்ட பகுதிக்கு உட்பட்ட காவல்நிலையத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!