”தமிழக அறநிலையத்துறை கோயில் நகைகளை உருக்க தடைகோரி வழக்கு தொடரப்படும்” என்று பா.ஜ. முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.இதுகுறித்து அவர் புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்து மக்களின் தற்போதைய நிலை குறித்துதான் ருத்ரதாண்டவம் படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு சிலர் அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அறநிலையத்துறை நிதியிலிருந்து கல்லுாரிகள் கட்டப்பட்டால், மத வழிபாடு குறித்த பாடம் வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தின் கருத்து. அதை தமிழக அரசு செயல்படுத்துமா.கோயில் நகைகளை உருக்கக்கூடாது என்று, விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். அறநிலையத்துறை சிறப்பாக செயல்படவும், தமிழகத்தில் காணாமல் போன 8000 கோயில்களை மீட்டெடுப்பதற்கு அமைச்சர் சேகர்பாபுவை நான் சந்திக்க தயார். மத்திய மாநில அரசுகள் இணக்கமாக இருந்தால் தான் பல்வேறு திட்டங்கள் மாநில அரசுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
147views
You Might Also Like
கிரீன் குளோப் நிறுவனரும் தலைவருமான திருமதி ஜாஸ்மின் அபூபக்கர் அவர்களுக்கு அன்னை தெரசா விருது
அன்பு, கருணை, மனிதநேயம் – வாழ்வின் உண்மையான செல்வம் இவ்வுலகிற்கு நாம் எதையும் கொண்டு வரவில்லை; இவ்வுலகை விட்டு செல்லும் போதும் எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை....
வேலூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக 38 – ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்ற செல்விக்கு பணிநிறைவு பாராட்டு விழா
வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலம்சத்துவாச்சாரியில் கடந்த 38 - ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணிபுரிந்து இம்மாதத்துடன் ஓய்வுபெற்றவர் விருதம்பட்டு ஜி.செல்வி. பணி நிறைவு பாராட்டு விழா செல்விக்கு,...
குடியாத்தத்தில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணிசார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர்...
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் பொதுத் தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் அறந்தாங்கி,அரசு...
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் அறக்கட்டளைச் சொற்பொழிவு
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் நடத்தும் திருமிகு நித்தியானந்த சுவாமிலவாரு அறக்கட்டளைச் சொற்பொழிவு 28/7/2026 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரான தமிழ்...




