கொரோனா வைரஸை தெறிக்கவிடும் தடுப்பூசிகள்.. இங்கிலாந்தில் வேகமாக பரவும் தொற்று.. விஞ்ஞானிகளின் முக்கிய அறிவிப்பு..!!
பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டாலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய தேவையில்லை என்று இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 2 ஆவது அலைக்கு காரணமான டெல்டா வகை கொரோனா வைரஸ் தற்போது இங்கிலாந்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 14,019 பேரை கொண்டு இங்கிலாந்து நாட்டின் பொது சுகாதாரத்துறை ஒரு ஆய்வு செய்தது. அதாவது இங்கிலாந்தின் பொது சுகாதாரத் துறை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மீது பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது.
இந்த ஆய்வின் முடிவில், டெல்டா வகை கொரோனாவிற்கு எதிராக இந்த 2 தடுப்பூசிகளும் மிகுந்த பாதுகாப்பை தருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனிநபர் பைசர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் 96 சதவீதமும், அஸ்ட்ராஜெனேகாவை போட்டுக்கொண்டால் 92 சதவீதமும் டெல்டா வகை கொரோனா வைரஸ்ஸில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.