உலகம்

கொரோனா காலத்தில் – உலகின் முதல் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு இருமடங்கு உயர்ந்துள்ளதாக தகவல்.

41views

கொரோனா ஆரம்பித்து இந்த இரண்டு ஆண்டுகளில் பல நாடுகள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், உலகின் முதல் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு இருமடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு இயங்கும் Oxfam சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வில், உலகின் முதல் 10 செல்வந்தர்களின் சொத்து மதிப்பு 700 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 1.5 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஒரு நாளைக்கு அவர்கள் சராசரியாக 1.3 பில்லியன் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 9 ஆயிரத்து 600 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் கொரோனா காலத்தில் போதுமான சுகாதார வசதிகள் இல்லாமலும், வறுமை மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாகவும் ஒரு நாளைக்கு உலகம் முழுவதும் 21 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும் அந்த ஆய்வு கூறியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!