உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 3,40,914 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25,40,09,075பேராக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பல கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. கொரோனா மூன்றாவது அலை பிரிட்டன், ரஷ்யா நாடுகளில் தீவிரமாக வீசத் தொடங்கியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களை தன் பிடிக்குள் வைத்துள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் 25 கோடி பேர் சிக்கியுள்ளனர். 51 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பல நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
உலகம் முழுவதும் பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பல கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. கொரோனா மூன்றாவது அலை பிரிட்டன், ரஷ்யா நாடுகளில் தீவிரமாக வீசத் தொடங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் ஒரே நாளில் 2,93,875 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22,96,61,001 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 4,404 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் மரணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 51,14,949 பேராக அதிகரிப்பு.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அங்கு 19,451 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. மொத்தம் 4,79,11,448 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து மொத்தம் 3,79,12,687 பேர் மீண்டுள்ளனர். ஒரே நாளில் 110 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். கொரோனாவால் மரணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,83,549 பேராக அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு ஒரே நாளில் 36,517 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மொத்தம் 95,61,099 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 38,823 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,219 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 90,70,674 பேராக உயர்ந்துள்ளது.