குரங்கம்மை பாதிப்பு;பன்னாட்டு விமான நிலையங்களில் தொடர் கண்காணிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதும், கேரள, ஆந்திர எல்லைகளிலிருந்து வருபவர்களுக்கு, குரங்கம்மை பாதிப்பு ஏதாவது உள்ளதா என்பதை கண்டறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில், மேற்கொள்ளப்பட்டுள்ள குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதும், கேரள, ஆந்திர எல்லைகளிலிருந்து வருபவர்களை, குரங்கம்மை பாதிப்பு ஏதாவது உள்ளதா என்பதை கண்டறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநில எல்லைகளில் இருந்து வருபவர்களுக்கு எச்சரிக்கையாக பரிசோதனை செய்வது கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறையோடு இணைந்து, டெங்கு, மலேரியா போன்ற நோய்களிலிருந்து மக்களைக் காப்பதற்கு உண்டான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.