இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது.. சாதனை படைப்பாரா திரௌபதி முர்மு?

102views

கட்சிகளின் ஆதரவின் அடிப்படையில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு மிக கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று, நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது. நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவர் தேர்வுக்கான வாக்குப்பதிவு கடந்த திங்கட்கிழமை நடந்து முடிந்தது.டெல்லியில் நாடாளுமன்றத்திலும், மாநிலங்களின் சட்டமன்றங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற முடிந்து வாக்கு பெட்டிகள் நாடாளுமன்றம் வளாகம் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் 727 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 9 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். ஆனால், 719 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 9 சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் வாக்களித்தனர்.

நாடாளுமன்றத்தில் உள்ள அறை எண் 73இல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 11 மணிக்கு துவங்குகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது நாடாளுமன்றத்தின் செயலாளர், வேட்பாளரின் பிரதிநிதி ஒருவர் மற்றும் உதவியாளர்கள் உடனிருப்பர் . வாக்கு எண்ணிக்கையின் போது இந்திய தேர்தல் ஆணையத்தால் அனுமதி வழங்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை காண்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதிவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய குடியரசுத் தலைவர் தேர்வுக்கான களத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபகி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த சின்ஹாவும் போட்டியிட்டனர்.

ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடி இனப் பெண்ணான திரௌபதி முர்மு, ஜார்கண்ட் ஆளுநராக இருந்துள்ளார். இவருக்கு பாஜக கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாது நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனா, ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!