71views
கியூபாவில் பொருளாதார நெருக்கடியை சரியாக கையாளாத அதிபரை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைநகர் ஹவானாவில் திரண்ட கியூபா மக்கள் கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார சரிவு, உணவு மற்றும் மருந்து பற்றாக்குறை, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனாவை கையாண்ட விதத்திலும் கம்யூனிஸ அரசு தோல்வியடைந்ததாக அந்நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டினர். கியூபாவில் நடைபெறும் போராட்டத்துக்கு அமெரிக்க அதிபர் பைடன் அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.