100
‘சுகாதார துறை அமைச்சராக இருக்கும் முதல்வர் ரங்கசாமி, பொறுப்பற்று செயல்படுகிறார். காரைக்காலில் காலரா பரவலுக்கு அவர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்’ என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்காரைக்கால் மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு, காலரா பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட பலர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதை தொடர்ந்து, மாவட்டத்தில் பொது சுகாதார அவசர நிலை மற்றும் 144 (2) உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., மாநில காங்., தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர், காலரா அதிகம் பாதிக்கப்பட்ட காரைக்கால் மேடு பகுதியை நேற்று பார்வையிட்டனர். மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.தொடர்ந்து, சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் காலரா பாதித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்வட்டார தலைவர் சுப்பையா, மாநில பொதுச் செயலாளர் பாஸ்கரன், மகிளா காங்.. தலைவர் நிர்மலா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:முதல்வராக பொறுப்பேற்று ஓராண்டு ஆகிய நிலையிலும் இதுவரை காரைக்கால் மாவட்டத்திற்கு முதல்வர் ரங்கசாமி வரவில்லை. காலரா பரவுவதற்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம். மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்படாதது நோய் பரவலுக்கு முதல் காரணம்.அரசு தொடர்ந்து காரைக்காலை புறக்கணிப்பதால் அதிகாரிகளும் மெத்தனமாக செயல்படுகின்றனர். காலரா பரவலுக்கு முதல்வர் ரங்கசாமி முழு பொறுப்பு ஏற்க வேண்டும். சுகாதார துறையின் அமைச்சராக இருக்கும் முதல்வர், பொறுப்பற்று செயல்படுகிறார்.முதல்வர் – அமைச்சர்கள் இடையே கருத்து வேறுபாடு காரணமாக காரைக்கால் புறக்கணிக்கப் பட்டுள்ளது.காரைக்கால் நகரப்பகுதியில் காங்., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுமான பணி என்.ஆர்.காங்., ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஓராண்டாக காரைக்காலில் உணவு தர அலுவலர் நியமிக்கமால் அந்த பணியிடம் காலியாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.