982views
அம்மாவும் அழகான பையனும்
அம்மா ஏன் கழற்றி வைத்துள்ளாய் இப்பொழுதெல்லாம் தாலி கொடியை….
அக்கறையாக கேட்கும் அன்பு மகனை வாரி அணைத்து விட்டு சொல்கின்றாள்……
அப்பா இல்லையடா அதனால் தான்….
ஆனாலும் நீதானே அப்பாவின் மனைவி…
ஆமாம்பா அதிலென்ன சந்தேகம்….
அப்ப ஏன் தாலியை கழட்டி வெக்கனும்……
அறியா சிறுவன் தான் என்றாலும் எத்தனை ஆழமான கேள்விகள் அவனுள்ளும்….
நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்கன்னு சொல்லியே….
வளரவளர அவனை மாற்றுவது யாராக இருக்கும் தேடுகிறேன் அந்த நான்கு பேரை…👍
#தயவுசெய்து இனியேனும் நாமாவது மனிதம் போற்றுவோம்…..
- சுமதிமணி