சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி-4

240views
பெண் பார்க்க ஊரே கிளம்புகிறது….
அனைவரும் பேருந்தில் ஏறி உட்கார பயணம் தொடங்குகிறது.
முன் இருக்கையில் செழியனின் தாய் மாமா மற்றும் மாமி உட்கார்ந்து இருக்கிறார்கள்.
பின்னிருக்கையில் செழியனின் தாய் லட்சுமி லட்சுமி மற்றும் தந்தை சரவணன் இருக்கின்றனர்.
இவர்கள் அடுத்து உள்ள இருக்கையில் செழியன் அமர்ந்திருக்கிறான்.
“தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாதது போல் முகத்தை” வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு வருகிறான்.
அம்மா லட்சுமி எல்லோருக்கும் பயணச்சீட்டு எடுக்கிறாள்.
இந்தாப்பா கண்டக்டர் கொஞ்சம் புளியம்பட்டி வந்ததும் சொல்லுப்பா…
“சரி மா நான் ஒவ்வொரு ஸ்டாப் லேயும் சொல்லிட்டு தான் வருவேன். புளியம்பட்டி வரும்போது உங்களுக்கு ஒருமுறை ஞாபகப்படுத்துறேன்”.
“சரி கண்டக்டர்” னு சொல்லிட்டு ஜன்னல் ஓரமா பார்த்துகிட்டே வரா…
அவளோட பிள்ளைக்கு அந்தப் பொண்ணு பிடிக்கணும்னு எல்லா கடவுள் கிட்டயும் மனசுல வேண்டிக்கிட்டே போறா….
கண்டக்டர்
“அம்மா……..புளியம்பட்டி கேட்டியே இந்த ஸ்டாப்பிங் தான் வந்து இறங்கு” சொல்ல…..
பெண் பார்க்க வந்தவங்க எல்லாம் வண்டியை விட்டு இறங்குகிறார்கள்.
பஸ் ஸ்டாப்பிலிருந்து ரெண்டு நிமிஷம் தான்.
பொண்ணு வீடு வந்துடுன்னு சொல்லிட்டு நடக்கிறா லட்சுமி…..
பொண்ணு வீட்டு வாசல்ல மாப்பிள்ளையை வரவேற்க பெண் வீட்டார் காத்திருக்கிறார்கள்.
வாங்க தம்பி …..
வாங்க தங்கச்சி ….
வாங்க மச்சான்……
எல்லாரும் நல்லா இருக்கீங்களா…
கேட்டுக்கிட்டே பெண்ணோட அப்பாவும், அம்மாவும் அன்பா உபசரிக்கிறார்கள்.
முதல்ல வந்தவங்களுக்கு தண்ணிய கொடுத்துவிட்டு
பிறகு காபி போட்டு சாப்பிடுவதற்கு பலகார எடுத்துட்டு வா.. சொல்றாரு பொண்ணோட அப்பா.
பெண் வீட்டில் அமர்ந்திருந்த செழியனின் முகம் வாடி பதற்றமாக இருந்தது.இருந்தான்.
சிறிது நேரத்தில் தாய் லட்சுமி
“அண்ணா… பொண்ண கூப்பிடுங்க .. நேரமாகுது” ன்னு சொல்ல…
பெண்ணின் அப்பா “சாந்தி போய் தேவியை கூட்டிட்டு வா… போ…”
“இதோ கூட்டிட்டு வரங்க.”
தேவி நல்ல நீல நிற புடவையில், தலையில் பூ வைத்து கைகளில் வளையல் போட்டு, வட்ட நிற முகத்தில் அழகாக பொட்டிட்டு , நடுத்தர உயரத்தில் இருந்தால் , பார்க்க அழகாக இருந்தாள்.
செழியனின் மாமி “தம்பி பொண்ணு வந்து இருக்கு கொஞ்சம் பாருங்க பார்த்தா தானே தெரியும்.”
பொண்ணு எப்படி இருக்குன்னு,சொல்ல செழியனும் மெதுவா தலையைத் தூக்கிப் பார்க்கும் போது அவனுக்கு அழகாக தெரிகிறாள்.
இருக்கமான செழியனின் முகம் இப்பதான் மெல்ல மெல்ல மகிழ்ச்சி தெரியுது.
தேவி நடுக்கத்துடன் செழியன் அருகே சென்று காபி கொடுக்க, தேவியை பார்த்தவாரே காபியை வாங்குகிறான் செழியன்.
பெண் பார்த்து முடிந்ததும் செழியனின் மாமி “தம்பி பொண்ணு எப்படி இருக்கான்னு” கேட்க
பேசாமல் புன்னகைக்கிறான் செழியன்.
செழியனின் மாமி “அப்புறம் என்ன அடுத்து கல்யாண பேச்சை ஆரம்பிக்க வேண்டியதுதான் ”
அங்கிருந்து சொல்லிட்டு கிளம்பினாங்க .
“அண்ணா நான் கிளம்புறேன். நான் வீட்டுக்கு போய்ட்டு கல்யாணம் விஷயத்தை பற்றி உனக்கு சேதி அனுப்புறேன்.”
சொல்லிட்டு லக்ஷ்மி கூட வந்தவங்க எல்லாரும் கிளம்பினாங்க,
விரைவில் செழியனின் கல்யாணம்.
  • ஷண்முக பூரண்யா. அ

 

 

2 Comments

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!