361views
காலை 5 மணி வானம் இருள் சூழ கிடந்தது. நல்ல ஜில்லென்று காற்று வீசியது. செழியன் காலையில் குளித்துவிட்டு உடைமாற்றி
“அம்மா நான் கிளம்புறேன். காலை உணவு சமைத்து எனக்கு எடுத்து வாம்மா”
சொல்லிட்டு கடைக்கு கிளம்புகிறான். கடைக்கு போன பிறகு ஏழு மணி ஆகியும் வெயில் வரதா தெரியல கடைக்கு எதிர் வீட்டில் இருக்கிற கார்குழலி பார்க்க காத்திருக்கிறான்.
கொஞ்ச நேரம் கழிச்சு “அம்மா காலேஜ் கிளம்புறேன்மா” சொல்லிட்டு வெளிய வரும் போது கார்குழலி வருகிறாள். இருவரும் ஒருத்தரையொருத்தர் பார்க்க கண்ணாலேயே பேசிக்கிறாங்க. கடைக்கு பொருள் வாங்க ஆள் வந்ததும் செழியனின் பார்வை திரும்புகிறது.
“அக்கா என்ன வேணும் உங்களுக்கு”
“எனக்கு 5 முட்டையும் மிளகாய் பொடியும் வேணும்” சொல்லிட்டு ஐம்பது ரூபாயை எடுத்து கொடுத்தாள் சித்ரா.
” இந்தாங்ககா மீதி 20 ரூபாய்” கொடுக்கிறான் செழியன்.
அம்மா லட்சுமி காலை உணவு சமைத்து எடுத்து வரா’
” டேய் செழியா நேரமாகுது வந்து சாப்பிடு வா” அப்படி ஒரு அதிகாரத் தோரணையோடு அன்போட கூப்பிட செழியனும் “இருமா வரன்னு” வந்து சாப்பிட உட்கார்ந்தான்.
“என்னம்மா இன்னிக்கு இட்லிக்கு என்ன செஞ்ச”
” கறி குழம்பு தாண்டா செஞ்சிருக்கேன்”
அப்படின்னு சொன்னதும் செழியன் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். “சரி எனக்கு இன்னும் ரெண்டு இட்லி அதிகமாக வை “அப்படின்னு சொல்லிட்டு சாப்பிடுறான்.
சாப்பிட்டு முடிச்சதும் கடை வியாபாரத்தை கவனிக்கிறான் செழியன்.
கடிகாரத்தை பார்க்கிறான் மணி அப்போ 5 ஆகுது. கார்குழலி கிட்ட பேச நேரம் ஆகுது. யோசிச்சு அப்பாவை கூப்பிட்டு கடையில உட்கார வைக்கிறான்.
” அப்பா கொஞ்ச நேரம் பாத்துக்கப்பா நான் கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வந்துடுறேன்”
அப்பாவும் “சரி நீ போய்ட்டு வா “ன்னு சொல்லிட்டு பார்த்துக்கிறார்.
டிவிஎஸ் வண்டியை எடுத்துக்கிட்டு புல்லட் வண்டி ஓட்டுற போல ஓட்டுறான் அவ்வளவு வேகம்.
பஸ் ஸ்டாப் வந்தது நிற்குது வண்டி. கார்குழலிக்காக காத்திருக்கிறான்.
ஒரு பஸ் வந்ததும் அதிலிருந்து வரா கார்குழலி.
” வா வந்து வண்டியில உட்காரு” அப்படின்னு சொல்லிட்டு பக்கத்து ஒரு பஸ் ஸ்டாப்புக்கு போறான்.
அப்பதான் அங்க யாரும் பார்க்க மாட்டாங்க கொஞ்சநேரம் பேசிக்கலாம் அப்படின்னு இருவரும் பேச ஆரம்பிச்சு கல்யாண விஷயத்துக்கு வராங்க.
” வீட்ல எப்போ நீ சொல்ல போற” அப்படின்னு கேட்கிற கார்குழலி.
” நீ இந்த வருஷம்தான் கடைசியா படிச்சு முடிக்க போற. இந்த ஒரு மாசம் டைம் கொடு. நான் அப்பா கிட்ட பேசிட்டு சொல்றேன். அப்படின்னு சொல்றான் செழியன்.
” என்னவோ பா சீக்கிரம் சொன்னா எனக்கு நிம்மதி” அப்படின்னு பெருமூச்சு விடுற கார்குழலி “சரி டைம் ஆகுது நம்ம கிளம்பலாமா” அப்படின்னு ரெண்டு பேரும் கிளம்புறாங்க.
மீண்டும் அடுத்த நாள் சந்திக்கலாம்.
-
ஷண்முக பூரண்யா. அ
Awesome story starts with the 1st part, egarly waiting for the next, keep up the good work congrats for the upcoming endeavor.
Great story and lines… Long way to pooranya♥️
Nice story. Wen its continuation wil.come
Thank you
Thank you ❤️
Tommarow
Great lines and story pooranya long way to go