232
ஓரிரு நாட்கள் சுயநினைவின்றி காணப்பட்ட செழியன் மூன்றாவது நாள் கண்விழித்துப் பார்க்க அவனைச்சுற்றி அவனது அக்கா, அம்மா, மனைவி ஆகியோர் இவனது கண்விழிப்புக்காக உறங்காமல் காத்துக்கொண்டிருந்தனர்.
மூவரும் கோபத்துடன் இருக்க எதற்காக இப்படி இருக்கிறார்கள் என்று தெரியாமல் விழிக்கிறான்.
“செழியா! நீ செய்வது உனக்கு சரியா???”
“என்ன சொல்றீங்க அம்மா???”
“நான் சொல்வது உனக்கு ஒன்னும் புரியவில்லை அப்படித்தானே!…”
“ஆமாம்!”
“எதற்கு? நீ கார்குழலி திருமணம் செய்து கொண்டாய். உனக்காக நாங்கள் பார்த்து திருமணம் செய்து வைத்த தேவியுடன் இருக்க வேண்டியதுதானே, உன்னுடைய சம்மதத்தில் தானே நான் உனக்கு திருமணம் செய்து வைத்தேன்.அன் று கார்குழலி தான் உன்னை வேண்டாம் என்று உதறிவிட்டு போனாள். இன்று நீயே சென்று அவளை திருமணம் செய்துவிட்டதாக சொல்கிறாள்.”
எதற்கும் பதில் பேசாமல் அப்படியே சிறிது நேரம் தன் குற்ற உணர்வினால் அமைதியாய் இருந்தான்.
சிறுது நேரம் கழித்து “நான் செய்ததெல்லாம் தவறு. என்னை மன்னித்து விடுங்கள். அவள் என்னால் பாதிக்கப்பட்டு விட்டாள் என்ற எண்ணத்தில் அவளை நான் திருமணம் செய்து கொண்டேன்.”
இந்த வார்த்தையை கேட்டதும் கோபத்தில் கையிலிருந்த பொருட்களை தூக்கி அடித்து விட்டு அறையைவிட்டு அழுதுகொண்டே வெளியே செல்கிறாள் தேவி.
உடனே லட்சுமி அவளை பின் தொடர்ந்து “எங்கே? போகிறாய் தேவி.”
“அத்தை…..எதுவும் சரியில்லை…..எதுவும் பிடிக்கல….எல்லாம் வெளி வேஷம்…… இவரை நான் எவ்வளவு நம்பினேன். ஆனால் எனக்கே இவர் துரோகம் செய்துவிட்டார். இனி நான் வாழ்ந்து என்ன ஆகப்போகிறது.
எனக்கு வாழ பிடிக்கவில்லை.”
“இரு தேவி கோபத்தில் எந்த முடிவும் எடுக்காதே..கொஞ்சம் பொறுமையா இரு. கோவம் தெளிய கொஞ்ச நாட்கள் ஆகும். அதன்பின்தான் நமக்கு சரியான முடிவு கிடைக்கும். அதனால் நீ அவசரப்படாமல் இரு நான் உனக்கு எப்பொழுதும் துணையாக இருப்பேன். நான்தான் உன்னை திருமணம் செய்து விட்டேன்.
அதனால் நான்தான் அதற்கான எல்லா நல்லதும் கெட்டதும் என்னையே சாரும். அதனால் தயவுசெய்து நான் சொல்வதைக் கேள்.”
“சரி சொல்லுங்கள் நான் என்ன செய்ய வேண்டும்.”
“அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கக் கூடாது சரியா என்மேல் நீ சத்தியம் செய்ய வேண்டும்.”
“சரி அத்தை நான் எதுவும் செய்ய மாட்டேன்.”
“இனி நான் பார்த்துக் கொள்கிறேன் நீ கவலையை விடு.”
“நான் சரி செய்து கொடுக்கிறேன்.அதனால் இந்த விஷயத்தை நீ உங்கள் வீட்டில் சொல்லாமல் இரு,
நாமே இதைப் பார்த்து கொள்ளலாம்.”
மீண்டும் நாளை சந்திப்போம்.
-
ஷண்முக பூரண்யா. அ
add a comment