88
அதிகாலையிலேயே எழுந்த செழியன் குளித்துவிட்டு தன் தாத்தா ,பாட்டியின் புகைப்படத்தின் அருகே சென்று வணங்கினான்.
தனது தாய் தந்தை அருகே சென்று எழுந்து நிற்க சொல்கிறான் பின்பு ஆசீர்வாதம் வாங்குகிறான்.
தனது மனைவியிடம் “என் மகள் எனக்கு மிகவும் ராசி ஆனவள். அவளால் தான் எனக்கு இந்த வேலை கிடைத்துள்ளது. நீ அவளை எப்பொழுதும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான்.
முதல்நாள் பணியில் சேர அலுவலகத்தை நெருங்குகிறான் அப்போது எதர்ச்சியாக கார்குழலி யை பார்க்க நேரிடுகிறது.
அவள் அதே அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக குறைந்த ஊதியத்தில் வேலை பார்ப்பதை பார்க்கிறான்.
பார்த்ததும் அவனால் பேசமுடியாமல் பழைய நினைவுகள் அவன் ஞாபகத்தில் வருகிறது.
இருப்பினும் அங்கிருந்து நகர்ந்து செல்ல முயற்சிக்கும்போது கார்குழலி வந்து செழியனை பார்த்து “எப்படி இருக்கிறீர்கள்??? எத்தனை குழந்தைகள் இருக்கிறது???”
என்று கேட்க அவன் அதற்கு பதில் கூறாமல் அங்கிருந்து நகர்ந்து விடுகிறான்.
இதேபோல் இரண்டு ,மூன்று நாட்கள் இவன் வருவதற்கு முன்னரே கார்குழலி வந்து இவனுக்காக காத்திருந்தாள்.
இதை பார்த்தும் பார்க்காதது போல் சென்று விடுகிறான் இதுவே ஒரு வாரம் தொடர்கிறது.
இதே தொடர செழியனுக்கு சங்கடமாக இருக்கிறது.
கார்குழலி பேச காத்திருப்பது தெரிந்தும் பேசுவதை தவிர்க்க நினைக்கிறான்.
இருப்பினும் கார்குழலியே வந்து செழியன் இடம் பேசுகிறாள்.
“என்னை மன்னிக்க மாட்டீர்களா??? நான் செய்தது பெரிய தவறு தான். அன்றைய சூழ்நிலை எனக்கு அவ்வாறு இருந்தது. அதனால்தான் நான் அப்படி பேசினேன். இப்போது நினைத்து பார்த்தால் தான்
நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் என்று எனக்கு புரிகிறது. நான் உங்களை என்னிடம் பழைய மாதிரி பேச சொல்லவில்லை, ஒரு தோழியாக நினைத்தாவது பேசுங்கள். அதுவே ! எனக்கு போதும்.”
சிறிது நேரம் அப்படியே பேசாமல் மௌனமாய் இருக்கின்றான் செழியன்.
மீண்டும் நாளை சந்திப்போம்.
-
ஷண்முக பூரண்யா. அ
add a comment