103
இப்படியே சில நாட்கள் நகர்கிறது.
கவிதாவின் இரு பிள்ளைகள் படிப்பில் நாட்டம் இல்லாததால் பள்ளியை விட்டு நிறுத்தி விடுகிறாள்.
இளைய மகள் ராதாவை தனது தாய் வீட்டில் வீட்டு வேலைகளை செய்ய விட்டு விடுகிறாள்.
இளைய மகனை அவர்களது கடையில் வேலைக்கு உதவியாக வைத்து விடுகிறாள்.
இவளும் வீட்டை காலி செய்து தனது தாய் வீட்டிலேயே வந்து தங்குகிறாள்.
ராதா தனது பாட்டிக்கு துணையாக எல்லா வீட்டு வேலைகளையும் செய்தாள்.
செழியனுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டாள்.
வெந்நீர் வைப்பதில் தொடங்கி அவனுக்கு இரவு உணவு எடுத்து வைப்பது வரை ராதா செய்துகொண்டிருந்தாள்.
செழியன் “தேவி……. தேவி…….” என்று கூப்பிடும் சொல் இப்பொழுது ராதா என்று மாறியது.
செழியன் தேவியைப் பற்றி எண்ணம் தோன்றும் போதெல்லாம் லட்சுமி அவளை பற்றி தவறாக பேசி மனதை மாற்ற செய்கிறாள்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே தொலைபேசி அழைப்பு மணி அழைக்கிறது.
அழைப்பது தேவியின் அம்மா சாந்தி .
செழியன் தொலைபேசி அழைப்பை எடுக்க, “நான் தேவியம்மா பேசுகிறேன்.உங்கள் மனைவிக்கு இன்று காலை இடுப்பு வலி வந்தது என்று அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தோம். இப்போது அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து விட்டது என்று சொல்லதான் உங்களுக்கு அழைப்பு விடுத்தேன்.”
“அப்படியா எந்த மருத்துவமனை இதோ சற்று நேரத்தில் வருகிறேன்.”
என்று சந்தோஷத்துடன் தொலைபேசியை வைக்கிறான்.
சமையலறையில் உள்ள லட்சுமியிடம் சந்தோஷத்துடன் ஓடுகிறான்.
“அம்மா……..அம்மா……..”
“என்னடா இவ்வளவு சந்தோஷம்!!!”
“எனக்கு பெண் குழந்தை பிறந்து விட்டது. இப்போதுதான் தேவியின் அம்மா தொலைபேசியில் கூப்பிட்டு இருந்தாங்க…” என்று சொல்ல
“உங்க அக்காவும் அப்பாவும் போற வழியில் சொல்லிட்டுப் போயிடலாம். அவங்களும் வருவாங்க
எந்த மருத்துவமனையில் ஏதாவது சொன்னாங்களா???”
“சொன்னாங்க அம்மா இப்பவே கிளம்பி போகலாம். “என்று சொல்ல மகனிடம் மறு வார்த்தை சொல்லாமல் கிளம்புகிறாள்.
மீண்டும் சந்திப்போம்.
-
ஷண்முக பூரண்யா. அ
👌
Awesome