சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர்: பகுதி- 19

105views
வளைகாப்பிற்கான வேலைகள் தடபுடலாக நடக்கிறது.
சரவணனும் , செழியனும் வந்த உறவினர்களை உபசரித்துக் கொண்டிருந்தனர்.
தேவியின் பெற்றோரும் அவரின் உறவினரும் வரிசை பொருட்களுடன் உள்ளே நுழைகிறார்கள்.
அவர்கள் எடுத்துவந்த புடவையும் ,பூவையும் வைத்து தேவிக்கு அலங்காரம் செய்துகொண்டிருக்க
உள்ளே வந்த கவிதா உன் அத்தைக்கு பூ கொண்டு போய் கொடு என்ற சொல்ல தேவியோ சரி சித்தி தருகிறேன். என்று லட்சுமி இருக்கும் ஒவ்வொரு இடத்திலும்,
“அத்தை இந்தாங்க பூ எடுத்துக்கோங்க” என்று கொடுக்க கண்டும் காணாததும் போலிருந்தாள்.
லட்சுமி இந்த செயல் தேவிக்கு கண்ணீரை வரவழைக்கிறது இருப்பினும் மௌனமாய் அவள் அறையில் போய் தனியே அழுகிறாள்.
உள்ளே தேவியின் தாய் வந்ததும் கண்ணை துடைத்துக்கொண்டு “அம்மா நீ எப்போ வந்தே” என்று கேட்டு சமாளிக்கிறாள்.
தேவியின் முகத்தை பார்த்த சாந்தி ஏன் ஒரு மாதிரி இருக்க என்று கேட்க……
“ஒன்னும் இல்லம்மா தலை வலிக்கிற மாதிரி இருக்கு அதான். சரி ஆகிடும் .வீட்டுக்கு போனதும் கசாயம் வைத்து கொடுக்கிறேன்.”
நலங்கு வைத்தவுடன் விழாவிற்கு வந்தவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
செழியனும், தேவிக்கும் ஒரு இலையில் உணவு வைத்து சாப்பிட சொல்கிறார்கள்.
இருவரும் சாப்பிட்டு முடித்தபின் நேரம் ஆவதால் தேவியை வீட்டுக்கு அழைத்து செல்ல லக்ஷ்மி இடம் கேட்க ….
“சரி சென்று வாருங்கள்” என்று சம்மதம் தெரிவிக்கிறாள்.
செழியன் தன் அம்மாவிடம் சென்று நானும் அவளை வீட்டில் அனுப்பி வைத்து விட்டு வருகிறேன் என்று சொல்லி கிளம்புகிறான்.
அனைவரிடமும் தான் கிளம்புவதாக சொல்லி வெளியே வருகிறாள் தேவி.
தாய் வீட்டுக்கு வர அங்கேயே தேவியுடன் தங்குகிறான் செழியன்.
இவன் அன்றிரவு வீட்டுக்கு வருவான் என்று லக்ஷ்மியும் கவிதாவும் காத்திருக்க செழியன் வராதது இவர்களுக்கு கோபத்தை உண்டு பண்ணுகிறது.
கவிதா தன் தாயிடம் இவனை நீ இப்படியே விட்டால் அவன் உன்னை பிற்காலத்தில் பார்க்கமாட்டான்.
உன் மருமகள் வீட்டாரிடம் சாய்ந்து விடுவான் என்று சொல்லி தாயின் மனதை மாற்றுகிறாள்.
இதை நினைத்து குழப்பத்திலிருந்து லட்சுமி மறுநாள் காலை செழியன் வீட்டுக்கு வர அவனைப் பார்த்ததும் பேசாமல் செல்கிறாள்.
செழியன் தன் தாய் முகம் மாறி இருப்பதைக்கண்டு “என்னாச்சும்மா உனக்கு” என்று கேட்க…….
“எனக்கு என்ன??? நான் எப்பொழுதும் போல தான் இருக்கிறேன்.”
விஷயத்தைப் புரிந்து கொண்ட செழியன் இரவு நேரமானதால் தான் தான் அங்கேயே தங்கி விட்டதாக சொல்கிறான்.
அவனிடம் கோபத்தைக் காண்பிக்காமல் , குளித்துவிட்டு வா காலை உணவு செய்து கொண்டிருக்கிறேன் அனைவரும் சாப்பிடலாம் என சொல்லிவிட்டு சமையல் அறைக்கு செல்கிறாள்.
மீண்டும் நாளை சந்திப்போம்.
  • ஷண்முக பூரண்யா. அ

1 Comment

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!