உலகம்

‘ஒமைக்ரானை’ தொடர்கிறது புதிய வகை கோவிட் ‘டெல்டாக்ரான்’

112views

உலகில் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ள ஓமைக்ரானைத் தொடர்ந்து டெல்டாக்ரான் என்ற புதிய வகை கோவிட் சைப்ரஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு பரவத் துவங்கிய கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் உலகில் பல நாடுகளிலும் பரவியது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து 2021ல் கோவிட்டின் இரண்டாவது அலை ஏற்பட்டது. அதில் கோவிட் 19, டெல்டா என்று உருமாற்றம் அடைந்ததுஇதனால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மிகவும் பாதிப்பு அடைந்தன.

தற்போது 2022ல் கோவிட் வைரஸின் மூன்றாவது அலையில் ‘ஒமைக்ரான்’ என்ற புதிய வகை கோவிட் பரவி வருகிறது. இதன் பரவல் டெல்டா வகை கோவிட்டை காட்டிலும் வேகமாக இருந்தாலும் இதுவரை பாதிப்பு குறைந்த அளவே உள்ளது. இந்நிலையில் சைப்ரஸ் நாட்டில் ‘டெல்டாக்ரான்’ என்ற புதிய வகை உருமாற்றம் அடைந்த கோவிட்டினை கண்டு பிடித்துள்ளனர். இது டெல்டா மரபு பின்னணியையும் ஒமைக்ரான் வகை கோவிட்டின் குணங்களை கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இருப்பினும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். டெல்டாக்ரானால் சைப்ரஸ் நாட்டில் இது வரை 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!