இந்தியா

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்; தொகுதிக்கு ஒரு வாக்குச் சாவடியை முழுக்க பெண்களே நிர்வகிக்க ஏற்பாடு: தலைமை தேர்தல் ஆணையம் தகவல்

49views

தேர்தலின் போது ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு வாக்குச் சாவடியை, முழுக்க பெண்களே நிர்வகிக்க ஏற்பாடு செய்யப்படும்.

இந்த புதிய திட்டம் நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் முதல் முறையாக கொண்டு வரப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தராகண்ட் ஆகிய 5 மாநில தேர்தல் தேதியை நேற்றுமுன்தினம் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இனிமேல் ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதியிலும் ஒரு வாக்குச் சாவடியை முழுக்க பெண்களே நிர்வகிக்கும் வகையில் ஏற்படுத்தப்படும். இந்த புதிய முறை வரும் 5 மாநில தேர்தல்களில் அமல்படுத்தப்படும். பாலின வேறுபாடு இல்லாமை, தேர்தல் நடைமுறைகளில் பெண்களை அதிக எண்ணிக்கையில் பங் கேற்க செய்வது போன்ற நோக்கங்களுடன் இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்படும்.

ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு வாக்குச் சாவடியில் உள்ள அதிகாரிகள், காவலர்கள் உட்படஅனைவரும் பெண்களே இருப்பார்கள்.

ஐந்து மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்படும். அப்போது ஒவ்வொரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் சீல் சரி பார்க்கப்படும். அதன்பின், சிறப்பு வரிசை எண்கள் சரி பார்க்கப்படும். இவை அனைத்தும் வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முன்னிலையில் நடத்தப்படும்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட 80 வயது மேற்பட்ட முதியவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. தேர்தல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட முதியவரின் வீட்டுக்கு சென்று வாக்குச் சீட்டு மூலம் வாக்குகளைப் பதிவு செய்வார்கள். இதுகுறித்து வேட்பாளர்கள், அவர்களுடைய ஏஜென்டுகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். வீடுகளில் வாக்குப் பதிவு நடைபெறுவது வீடியோ எடுக்கப்படும். இந்த நடைமுறைகள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும்.

இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!