பொழுதுபோக்கு பூங்கா நடத்தும் எம்ஜிஎம் குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் எம்.ஜி.எம். டிஸ்ஸி வேல்ட் என்ற பொழுதுபோக்குப் பூங்காவை எம்ஜிஎம் குழுமம் நடத்தி வருகிறது. இது கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. பொழுதுபோக்கு பூங்கா நடத்திவரும் எம்ஜிஎம் குழுமம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை 2வது நாளாக சோதனை நடத்தி வருகிறது. சென்னை, நெல்லை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
வரி ஏய்ப்பு புகார் எழுந்ததை அடுத்து எம்ஜிஎம் குழும நிறுவங்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக
சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரத்தில் எம்ஜிஎம் குழுமத்தின் மதுமான ஆலையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் ஊழியர் முக்கிய ஆவணங்களை வயல்வெளிகளில் வீசியதை கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளது.