விளையாட்டு

உலக தடகளம் ஈட்டி எறிதல்: பைனலுக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா

96views

உலக தடகளம் ஈட்டி எறிதல் தகுதி சுற்றில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.39 மீட்டர் தூரம் எறிந்து பைனலுக்கு முன்னேறினார்.

அமெரிக்காவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதி சுற்று போட்டி இன்று நடந்தது. இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, ரோகித் யாதவ் பங்கேற்றனர். இதில் நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியில், 88.39 தூரம் எறிந்து பைனலுக்கு முன்னேறினார். அவருக்கு சவால் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டவரும், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவருமான, செக் குடியரசின் ஜாகுப் சவால், 85.23 மீட்டர் தூரம் எறிந்து, பைனலுக்கு முன்னேறினார்.

‘குரூப் ஏ’ பிரிவிலிருந்து நீரஜ் சோப்ரா தகுதி பெற்ற நிலையில், ‘குரூப் பி’ பிரிவிலிருந்து மற்றொரு இந்திய வீரர் ரோகித் யாதவ் தகுதி சுற்றில் போட்டியிட உள்ளார். ஈட்டி எறிதல் பைனல், இந்திய நேரப்படி வரும் ஞாயிறு (24ம் தேதி) காலை 7.05 மணிக்கு நடைபெறுகிறது. இதில் நீரஜ் பதக்கம் வெல்லும் பட்சத்தில், 19 ஆண்டுக்குப் பின் உலக தடகளத்தில் பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனை படைப்பார்.

கடைசியாக 2003 உலக தடகளத்தில் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், இந்தியாவுக்கு வெண்கலம் வென்று தந்தார். இதன் பின் இந்தியா ஒரு பதக்கமும் வெல்லவில்லை. 19 ஆண்டுக்குப் பின் நீரஜ் சோப்ரா பதக்கம் வென்று தருவார் என இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!