சினிமா

உலக அளவில் 4வது இடம் பிடித்த தளபதி விஜய்.. முதல் 4 இடத்தை பிடித்த தமிழ் படங்கள்

97views

கோலிவுட்டில் ஒரு மாஸ் நடிகர் என்றால் அது தளபதி தான். எப்பவுமே இவரோட படங்கள் பெரிய அளவில் வரவேற்புகளை பெற்று வருகிறது.

அதுமட்டும் இல்லைங்க தளபதி படத்துக்கு புரோமோஷனே தேவையில்லை. விஜய் படம்னாலே போதும். விஜய்ங்கிற பெயரே ஒரு பிராண்ட் நேம் தான்.

இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் உலக அளவில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஆமாங்க அதாவது உலக அளவில் பிரபலமான ஐஎம்டிபி தளம் தனது பயனாளிகளின் விருப்பத்திற்குரிய இந்தியாவின் டாப் 10 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் 2021ஆம் ஆண்டு அதாவது இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 29 வரை வெளியான படங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதில் டாப் 10 படங்களில் மூன்று தமிழ் படங்கள் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. உலக அளவில் டாப் 10 படங்கள் தரவரிசை பட்டியலில் மாஸ்டர் படம் நான்காவது இடத்தைப் பெற்றிருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து ஏழாவது இடத்தில் தனுஷின் கர்ணன் படம் இடம் பெற்றுள்ளது.

வெளியாகி கிட்டத்தட்ட ஓராண்டாக உள்ள நிலையிலும் ரசிகர்கள் பார்க்க விரும்பும் படங்கள் பட்டியலில் மாஸ்டர் படம் 4வது இடத்தை பிடித்திருப்பது பெரியவிஷயமே. மேலும் உலக அளவில் டாப் 10 பட்டியலில் மூன்று தமிழ் படங்கள் இடம் பெற்றிருப்பது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!