உலகின் ஆகப் பெரிய Burj Khalifa கட்டடத்தின் உச்சியில் பெண் ஒருவர் நிற்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியானதை அடுத்து அவ்வளவு உயரத்தில், அந்தப் பெண் எவ்வாறு நின்றார், அந்தக் காட்சி செயற்கையானதா எனப் பலரும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் வலைத்தளவாசிகளின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளது, Emirates நிறுவனம். காட்சியில் தோன்றிய அனைத்துமே உண்மை என கூறியுள்ள நிறுவனம், தேர்வு செய்யப்பட்ட அந்த ஊழியருக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அவருடைய பாதுகாப்புக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதுடன் அவர், கட்டடத்தின் உச்சியில் இருந்த கம்பத்துடனும், வேறு இரு பகுதிகளுடனும் கயிற்றால் இணைக்கப்பட்டிருந்தார் எனவும் Emirates நிறுவனம் கூறியுள்ளது.
அத்துடன் பாதுகாப்புக் கயிறுகள் அவருடைய சீருடைக்குள் மறைக்கப்பட்டிருந்ததாகவும், சிப்பந்தியும், மற்றவர்களும் கட்டடத்தின் உச்சியை எட்ட1 மணி நேரத்துக்கு மேல் ஆனதாகவும் கூறியுள்ள Emirates நிறுவனம், ஆளில்லா வானூர்தி மூலம் ஒரே முறையில் அந்தக் காட்சி பதிவு செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.