சினிமாவிமர்சனம்

உலகமே கொண்டாடும் அலாவுதீன் கதை

406views

கேட்டதை கொடுக்கும் பூதம் இருக்கும் விளக்கு கிடைத்தால் என்ன ஆகும் என்பதே. பழைய கதையை மெருகேற்றி எவ்வளவு சிறப்பாக தர முடியுமோ அவ்வளவு சிறப்பாக தந்திருக்கிறார் இயக்குனர்.

நீண்ட நாளைக்கு பிறகு வில் ஸ்மித் அதகளம் செய்திருக்கிறார்.  வில் ஸ்மித் சொல்லும் கதையில் இருந்து தொடங்கும் படம் இறுதிவரை ஸ்வாரஷ்யமாக செல்கிறது

படத்தின் மிக பெரிய பிளஸ் இசை.அந்த கிராபிக்ஸ் குரங்கு செய்யும் சேட்டைகள் அருமை இன்னும் கொஞ்சம் நேரம் காட்சிகளை இணைத்திருக்கலாம்.பேசும் கிளி, பறக்கும் கம்பளி, சாகசம் என புத்தகங்களில் படித்த கேட்ட விசயங்கள் தத்ரூபமாக கொண்டு வந்தது சூப்பர்.அலாவுதீன் படம் பார்க்கும்  போதே நமக்கும் இப்படி ஒரு விளக்கு கிடைச்சால் சூப்பரா இருக்கும்னு தோணும்ல…

காலம் காலமாகக் குழந்தைகளிடமும் பெரியவர்களிடமும் புகழ்பெற்ற ‘அரேபிய இரவுகள்’ கதைகளில் ஒன்றான ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’தான்  டிஸ்னியின் லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் திரைப்படமான ‘அலாவுதீன்’.

இந்தப் படத்தில் அக்ரபா கற்பனை தேசத்தில் நடக்கிறது கதை. அலாதீன்  தன் குரங்கான அபுடன் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டுவருபவன்.

பூதத்தின் வேடத்தில் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் வில் ஸ்மித் நடித்திருக்கிறார்.

அற்புத விளக்கை வைத்திருப்பவர்களுக்கெல்லாம்  நினைத்த வரத்தை அளித்தாலும் பூதத்தின் இடம் குறுகலான  சிறிய விளக்குதானே.

இந்த பூதம் சுதந்திரத்துக்காகவும் நட்புக்காகவும் காதலுக்காகவும் ஏங்குகிறது.குழந்தைகளையும், குழந்தை தன்மையை இன்னும் தங்களுக்குள் பேணுபவர்களையும் நிச்சயம் வசீகரிப்பான் இந்த அலாவுதீன்.படம் பார்க்காதவங்க தங்களது குழந்தைக்களுடன்  சிரமமான இச்சமயத்தில் பார்த்து மகிழுங்கள்…

 

 

  • மஞ்சுளாயுகேஷ்., துபாய்

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!