369
டாக்டர் . லட்சுமி ப்ரியா pachydermtales எனும் நிறுவனத்தை நடத்தி கொண்டிருக்கிறார்.
-
நோக்கம்.
மொழிதிறனை மேம்படுத்தல் , பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்தல் வேண்டும் , அதுமட்டும் அல்லாமல் நமது நாட்டு இலக்கிய செல்வங்களை அயல்நாட்டினரும் படிக்கும் வண்ணம் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல் . புதுமைகளை உருவாக்குதல், இணையதளத்திலும் புத்தகங்களை கொண்டுசெல்லல், பல்வேறுதளங்களில் ( மீடியா) இது தனது பணிகளை செய்கிறது.
-
சிறப்பு-
இளம் தொழிலதிபரான லட்சுமி ப்ரியா இதுவரை 50 நூல்களை கன்னடநாட்டு பதிப்பகத்தோடு இணைந்து வெளியட்டுள்ளார். இந்த நூல்கள் நூற்றிற்கும் மேற்பட்ட பெரிய எழுத்தாளர்கள் , மற்றும் அறிமுக எழுத்தாளர்களால் உருவான நூல்கள் ஆகும். இதை தவிர கவிதை நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
-
பிரிவுகள்
ஆங்கில கதைகளுக்கு – ஆவா
பெண்களின் பிரச்சனைகளைப் பேச தமிழில்-ஆம்பல்
தெலுங்கில்-ஆவிஷ்கா
கன்னடத்தில்-ஆமேயா
மலையாளத்தில்-ஆவாரிகா
ஹிந்தியில்-ஆக்ரிதா
குழந்தைகளுக்காக- மாயா. இதில் மாற்றுதிறனாளிகளே சூப்ப்ர் ஹீரோ.
-
இவரது படைப்புகள்
ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் சிறந்த எழுத்தாளர். மற்றும் மொழிபெயர்ப்பாளர் . இவரது நூல்கள் white house and black shrouds, Gun powder series, Tales pin , தமிழில் பல கவிதைகளும் படைத்துள்ளார்.
-
மொழிபெயர்ப்பு நூல்கள்.
Shared meats and late night என்பன இவரது நூல்கள். கனலி எனும் இணையதள இலக்கிய தளத்தில் நீலம் தோய்ந்த எனும் ஆங்கில நாவலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
கல்வியாளராக இவரது சாதனைகள் – மலேசியா ,சிங்கப்பூர் , தாய்லாந்து , இந்தோனேஷியா , பூடான் போன்ற நாடுகளில் இலக்கியம் பற்றிய உரையை ஆற்றியுள்ளார். இந்தியாவின் பல மாநிலங்கள் குறிப்பாக டார்ஜிலிங் , சண்டிகர், நேபாள் போன்ற இடங்களில் , மற்றும் அயல்நாடுகளில் மாணவர்களின் உள்ளிருக்கும் படைப்பு தன்மையை கொண்டுவரும் ( creative writer) இளம்வயது பேராசிரியையாக இவர் உள்ளார். சிறந்த கல்வி இதழ்களில் இவரது கட்டுரைகள், ஆய்வுகள் வெளியாகியுள்ளன.
இவர் 1. Mind&mom 2. Lemon & spoon 3. Captsee 4. Khelo India (Media) என்ற மூன்று நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் விளம்பர திட்டமிடுபவராக உள்ளார். இவரது நினுவனம் மகளிர் தினமன்று பெண்சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவினை சிறப்பாக நடத்தியது.
-
சமூக சிந்தனைகள்.
சாதி மத வேறுபாடற்ற சமுதாயம் இவரது நோக்கம். Pachydermtales ஒரு குடும்பம். இதில் இலக்கியம், கலை , மொழிப்பற்று உள்ள பெண்கள் இணைந்து பணிபுரிகின்றனர். இங்கு இணைந்து பணிபுரிவோர் அனைவருமே கிராமத்து எளிய பெண்கள் . பெரிய பின்பலம் இல்லாதவர்கள். இவர்கள் திறமையை தினந்தோறும் மெருகேற்றிக்கொள்ள கடுமையாக உழைக்கின்றனர்.பெண்கள்பொதுவாகவே வாழக்கையின் வலிகளை உணர்ந்தவர்கள். வீட்டில் அச்சாணியாய் இருக்கும் பெண்கூட வெளியில் வேலைக்கு போகாமல் இருந்தால் வீட்டில சும்மாதான் இருக்கிறேன் என தன்னை அறிமுக படுத்திக் கொள்ளும் வழக்கம் உள்ளது. ஏதேனும் சிலர் செய்யும் தவறினால் கிராமங்களில்படித்து முடிக்கும் முன்னே பெண்களுக்கு திருமணம் நடைபெறுகிறது. கணவனை இழந்த பெண்களின் மேல் முட்கள் வீசப்படுகின்றன. கணவனால் புறக்கணிக்கபட்ட பெண் மற்ற பெண்களால் புறம் பேசப்படுகிறாள் .இளம் குழந்தைகள்காமுகர்களால் கசக்கப்படுகிறார்கள். இது போன்ற பல பிரச்சனைகளுக்கு இந்த நிறுவனத்தின் கதாசிரியர்களால் தீர்வு சொல்லமுடிகிறது.
பெண்கள் தங்கள்வலிமையை அதிகரித்து கொள்ளவும்தாங்கள் ஒரு போகப்பொருள் அல்ல, தங்களுக்கும் திறமை உண்டு என்பதை எந்த வயதிலும் நிருபிக்கவும் ஒரு பாதையை pachydermtales காட்டுகிறது. சக பெண்களிடையே இருக்கும் திறமையை கண்டறிந்து அவர்களை எழுத்தாளர்கள் ஆக்கி அவர்களின் நூல்களை பிரசுரித்து மக்களின் கைகளை அடையச் செய்கிறது . இங்கு பெண்கள் முழுசுதந்திரத்துடன் வேலை செய்கிறார்கள் .இவர்களின் படைப்புகள் பாதுகாப்பாக உள்ளன. அவர்களின் படைப்பிற்கு ஏற்ற மரியாதைகள் கிடைக்கின்றன.பெண்களை பொருளாதார சுதந்திரம் உடையவர்களாக உருவாக்குவது இதன் நோக்கம். இதன் முக்கிய சிறப்பு நாட்டின் பல பகுதியில் உள்ளவர்கள் தங்கள் வீட்டிற்குள் இருந்துகொண்டே இணையதளத்தின் வழியாக தங்கள் வேலைகளை செய்கிறார்கள். எனவே படிப்பு, குழத்தைகள் வளர்ப்பு முதலியவைகள் பாதிக்கப்படுவதில்லை. பெண்கள் கல்வி, அவர்களை தொழில்முனைவோர் ஆக்குதல் இதுவே இவர்களது நோக்கம்.
-
இவரை பற்றிய கட்டுரைகள் நெதர்லாந்தை சேர்ந்த ஆதியுலகம் எனும் மாத இதழிலும், ஓம்சக்தி மற்றும் வெற்றிமுரசு எனும் மாத இதழிகளிலும் வெளியாகி உள்ளது.
-
இவர் ஒரு பன்முக தன்மை கொண்டவர் . பாடகி, மற்றும் நவீன ஓவியங்கள் வரைபவர்.