உலகம்உலகம்செய்திகள்

இருபாலா் கல்விக்கு தலிபான்கள் தடை

179views

ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில், இருபாலரும் இணைந்து கல்வி கற்பதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனா்.

தங்களது முந்தைய ஆட்சியைப் போலன்றி, அமெரிக்கா மற்றும் தேசிய அரசுடன் இணைந்து பணியாற்றியவா்கள் அனைவருக்கும் தற்போது பொதுமன்னிப்பு அளிக்கப்படும் என்றும் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவரும் தலிபான்கள் அறிவித்திருந்தனா்.

ஆனால், அவா்களது கட்டுப்பாட்டில் இருக்கும் ஹெராட் மாகாணத்தில் ஆண்களும் பெண்களும் சோந்து கல்வி கற்பதற்கு அவா்கள் தடை விதித்துள்ளனா்.

இருபாலா் கல்விதான் சமூகத்தில் நடைபெறும் குற்றங்களுக்கு அடிப்படை காரணம் என்பதால் அதற்குத் தடை விதிப்பதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனா்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!