செய்திகள்விளையாட்டு

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து மிக முக்கிய வீரர் விலகல்; உறுதிப்படுத்தினார் விராட் கோலி !!

44views

காயம் காரணமாக ஷர்துல் தாகூர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என விராட் கோலி அறிவித்துள்ளார்.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்று பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம் இருந்த நிலையில், போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக முற்றிலும் கைவிடப்பட்டதால் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஆகஸ்ட் 12) துவங்க உள்ளது. இங்கிலாந்தின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் துவங்க உள்ள இந்த போட்டிக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

இரு அணிகளுக்கும் மிக முக்கியமான இந்த போட்டியில் ஷர்துல் தாகூர் விளையாடுவாரா இல்லையா என்பது தொடர்ந்து கேள்விக்குரியாக இருந்த வந்த நிலையில், ஷர்துல் தாகூர் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார் என்பதை விராட் கோலியே அறிவித்துள்ளார்.

இது குறித்து விராட் கோலி பேசுகையில், ‘இடது காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஷர்துல் தாகூர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். ஷர்துல் தாகூர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்’ என்று தெரிவித்துள்ளார்.

யாருக்கு இடம் கிடைக்கும்..?

காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷர்துல் தாகூர் விளையாட வாய்ப்பு இல்லை என்பதால் அவரது இடம் இஷாந்த் சர்மா அல்லது ரவிச்சந்திர அஸ்வின் ஆகிய இருவரில் ஒருவருக்கே கிடைக்கும். இஷாந்த் சர்மாவா, அஸ்வினா என்றால் இந்திய அணியின் முதல் தேர்வு இஷாந்த் சர்மாவாக தான் இருப்பார் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர், இதனால் இஷாந்த் சர்மாவிற்கு இரண்டாவது போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

அதே போல் கடந்த போட்டியில் குறை சொல்ல முடியாத அளவிற்கு பந்துவீசிய ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கும் இந்த போட்டிக்கான ஆடும் லெவனில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும்.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா/ அஸ்வின், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!