இந்தியா

இன்று முதல் ரயில் முன்பதிவில் நாடு முழுவதும் அதிரடி மாற்றம் நடைமுறைக்கு வந்தது!

136views
நாடு முழுவதும் ரயில் முன்பதிவில் இன்று முதல் அதிரடி மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தது. இனி மேல், ஒரே நேரத்தில் ரயில் பயணத்திற்கான முன்பதிவு செய்ய இயலாது.
பயணிகள், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் முன்பதிவு செய்ய தனி நேரமும், ஸ்லீப்பர் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்வதற்கு தனி நேரமும் ஒதுக்கப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பேருந்து சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ரயில் சேவை நிறுத்தப்படவில்லை. முதல் அலையின் போது ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பலரும் நடந்தே சொந்த ஊர்களுக்கு சென்றது உலக அளவில் விவாதப் பொருளானது.

அதனால் இந்த முறை ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்படவில்லை. முக்கியமான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இ-பதிவு கொண்டு பயணிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஜூலை 1ம் தேதி முதல் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் முன்பதிவு செய்ய காலை 10 மணி முதல் 11 வரையிலும், ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் முன்பதிவு செய்ய காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் நேர ஒதுக்கீடு செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதே சமயம் இன்று முதல் சுவிதா ரயில்களில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்றும் தட்கல் டிக்கெட் ரத்து செய்யப்படும் பொழுது 50 சதவீதம் கட்டணம் திருப்பி தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!