விளையாட்டு

இந்தியா ‘நம்பர்-3’ – ஒருநாள் தரவரிசையில்

63views
ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி ‘நம்பர்-3’ இடத்தில் நீடிக்கிறது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஒருநாள் அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
ஜிம்பாப்வே தொடரை 3-0 என முழுமையாக வென்ற இந்திய அணி, 111 புள்ளிகளுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.அடுத்து வரும் அக். 6ல் சொந்த மண்ணில் துவங்கும் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா சாதிக்கும் பட்சத்தில் தரவரிசையில் முன்னேறலாம்.
நெதர்லாந்து தொடரை முழுமையாக கைப்பற்றிய பாகிஸ்தான், 107 புள்ளியுடன் நான்காவது இடத்துக்கு முன்னேறியது. வெஸ்ட் இண்டீசில் 2-1 என ஒருநாள் தொடரை வென்ற நியூசிலாந்து அணி, 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது.இங்கிலாந்து அணி (119) இரண்டாவது இடத்தில் தொடர்கிறது.
101 புள்ளியுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது ஆஸ்திரேலியா. அடுத்து ஜிம்பாப்வே, நியூசிலாந்து தொடரில் சாதித்தால், தரவரிசையில் பாகிஸ்தானை முந்தலாம்.
‘டாப்-10’ அணிகள்ஒருநாள் தரவரிசையில் ‘டாப்-10’ இடத்திலுள்ள அணிகள் விபரம்:அணி புள்ளிநியூசிலாந்து 124இங்கிலாந்து 119இந்தியா 111பாகிஸ்தான் 107ஆஸ்திரேலியா 101தென் ஆப்ரிக்கா 101வங்கதேசம் 92இலங்கை 92வெஸ்ட் இண்டீஸ் 71ஆப்கானிஸ்தான் 69

Right Click & View Source is disabled.

error: Content is protected !!