இந்தியாவின் பறக்கும் மனிதர் மில்கா சிங்(91) கொரோனாவால் உயிரிழந்தார். பிரதமர் நரேந்திரமோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத்சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர், சில தினங்களுக்கு முன்னர்தான் கொரோனாவால் உயிரிழந்தார்.
முன்னாள் இந்திய தடகள வீரர் மில்கா சிங் கடந்த மாதம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல்நிலை சீராக இருந்ததால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இம்மாதம் அவருக்கு ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவ கல்லூரு ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு ஐசியூவில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணி அளவில் உயிரிழந்தார். மில்கா சிங்கின்மனைவி நிர்மல் கவுர், சில தினங்களுக்கு முன்னர்தான் கொரோனாவால் உயிரிழந்தார். நிர்மல் கவுர், இந்தீய வாலிபால் அணியில் கேப்டனாக இருந்தவர்.
இந்தியாவின் பறக்கும் மனிதர் என புகழப்படும் மில்கா சிங், 1956, 1960, 1964 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றவர்.
60ல் ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் மயிரிழையில் ஒலிம்பிக் பதக்கம் நழுவியது. ஆனாலும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 4வது இடம் பிடித்தார்.
மில்கா சிங்கின் மறைவுக்கு பிரதமர், குடியரசுத்தலைவர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.