தமிழகம்

ஆன்ம லிங்கத்தை வைத்து இரு கைகளால் அழுத்தி கை வைத்தியம் செய்யுங்கள் -கொரோனா நெருங்காது -நித்தி அதிரடி ஆலோசனை.

443views

சர்ச்சைகளுக்குப் பெயர் போன சாமியார் நித்தியானந்தா கொரோனா நோயை விரட்ட பல ஐடியாக்களை அள்ளி தெளித்துள்ளார். அதில், அடிக்கும் போது வலிக்காமல் இருக்கும் மருந்து போல, கொரோனா நமது நுரையீரலுக்குள் நுழையாமல் இருக்க கேட் போட்டு நிறுத்த வேண்டுமா? ஆன்ம லிங்கத்தை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு இரு கைகளால் அழுத்தி கை வைத்தியம் செய்யுங்கள்.

கொரோனா உங்களை நெருங்காது, அத்துடன் நவபாஷாணத்தின் மீது பொழியப்பட்ட பாலும், நீரும், வேம்பு ரசமும் கரும்பூஞ்சை நோய்க்கு மருந்து என்றும் கூறியுள்ளார்.

கொரோனா என்ற ஒற்றை சொல் பல உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் படிப்படியாக உலக நாடுகளை அச்சுறுத்த ஆரம்பித்தது.
கொரோனாவுக்கு முடிவு கட்ட முடியாமல் வல்லரசு நாடுகள் கூட திணறி வருகின்றன. இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,54,96,330 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் கொரோனா இரண்டாவது அலையில் 2,83,248 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவை தடுக்கும் வண்ணம் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் நித்தியின் இந்த வீடியோ இணையவாசிகளுக்கு சிரிப்பை உண்டாக்கியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!