விளையாட்டு

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – 65 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை.. இந்திய வீராங்கனைகள் அபாரம்

123views
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும், இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்திய அணி 8வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய ஆடவர் அணி இழந்த பெருமையை மகளிர் அணி எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இது இலங்கை எடுத்த தவறான முடிவு என்று அப்போது அவர்களுக்கு தெரியவில்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன்.. நாளைய முக்கிய அறிவிப்பு..முன்னிலையில் இருப்பது யார்? அதிர்ச்சி தொடக்கம் இந்திய அணியில் ராதா யாதவ்ககு பதிலாக ஹேமலதா சேர்க்கப்பட்டார். அடித்து ஆட வேண்டும் என்ற உத்வேகத்தில் இறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீராங்கனைகள், இந்திய வீராங்கனைகளிடமிருந்து இப்படி ஒரு பந்துவீச்சை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். இறுதிப் போட்டியில் விளையாடப்போகிறோம் என்ற பதற்றமும் இலங்கை வீராங்கனைகளுக்கு இருந்தது.
ஒரே ஓவரில் 3 விக்கெட் இதன் காரணமாக, இலங்கை அணியின் தொடக்க வீராங்கனை சம்மாரி அட்டப்பட்டு, அனுஸ்கா ஆகியோர் ரன் அவுட்டாகி வெளியேற, இலங்கைக்கு ஆரம்பமே அதிர்ச்சிக்கரமாக அமைந்தது.இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி வீராங்கனைகள், இந்திய பந்துவீச்சுக்கு கொஞ்சம் கூட சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
9 ரன்களுக்கு 4 விக்கெட் ஹர்சிதா ஒரு ரன்னிலும், ஹாசினி டக் அவுட்டாகியும், அனுஸ்கா ரன் அவுட்டாகியும், 4வது ஓவரில் இலங்கை அணி தொடர்ந்து 3 விக்கெட்டுகளை இழந்தது 9 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்த இலங்கை அணியால், கொஞ்சம் கூட மீண்டு எழ முடியாத படி இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர்.
65 ரன்களுக்கு ஆட்டமிழப்பு செல்போன் நம்பர் போல் இலங்கை வீராங்கனைகள் ஒற்றை இலக்கம் ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அந்த அணியில் இனோகா ரன்வீரா அதிகபட்சமாக 18 ரன்களும், ரனசிங்கே 13 ரன்களும் எடுக்க, 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்துள்ளது, இந்திய வீராங்கனை ரேனுகா சிங் 3 ஓவர் வீசி 5 ரன்களை விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!