உலகம்உலகம்

அழிந்துபோன டாஸ்மேனியன் புலி இனத்தை மீண்டும் கொண்டுவர விஞ்ஞானிகள் முயற்சி

139views
ஆஸ்திரேலியாவின் ‘டாஸ்மேனியன் புலி’ உலகில் அழிந்துபோன விலங்கினங்களில் ஒன்றாகும். இவை தைலசின் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த புலிகள் 1930-ல் வரை பூமியில் வாழ்ந்தன.
அதன்பின்னர் வேட்டையாடுதல், ஒருவகையான நோய் காரணமாக இந்த வகை புலி இனங்கள் அழிந்தன. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாகாணத்தில் உள்ள உயிரியியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த உலகின் கடைசி டாஸ்மேனியன் புலி 1936-ம் ஆண்டில் இறந்தது. இந்த நிலையில், ஸ்டெம் செல், ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அழிந்துபோன டாஸ்மேனியன் புலி இனத்தை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் முயற்சியில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.
டாஸ்மேனியன் புலியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இந்த சமீபத்திய திட்டம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் வந்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரிவ் பாஸ்க் பேசும்போது, “இதற்காக டாஸ்மேனியன் புலியை போன்ற ஜீன் அமைப்புடைய விலங்கின் ஸ்டெம் செல்லை பிரித்து எடுக்க இருக்கிறோம்.
பின்னர் ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இன்னும் 10 ஆண்டுகளில் டாஸ்மேனியன் புலியை மீண்டும் பார்க்க முடியும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!