உலகம்

அமெரிக்காவில் கொரோனா புதிய உச்சம் 4,64,135 பேர் பாதிப்பு -1,666 பேர் மரணம்

44views

அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவல் வேகமும் தீவிரமடைந்துள்ளது.

ஒரே நாளில் 4,64,135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓமிக்ரான் வைரஸ் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும் என்று அமெரிக்க தொற்று நோய் நிபுணர் மற்றும் வெள்ளை மாளிகையின் முதன்மை மருத்துவ ஆலோசகருமான டாக்டர் ஆண்டனி பவுசி தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆண்டனி பவுசி, அமெரிக்காவில் 61.7 சதவீதம் மக்கள் தான் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

அதிவேகமாக பரவக்கூடிய ஓமிக்ரான் வைரஸ், டெல்டா வைரஸை மிஞ்சிவிட்டதாக கூறினார். ஓமிக்ரான் அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட முக்கால்வாசி கொரோனா பாதிப்புகள் ஓமிக்ரானால் ஏற்படுகிறது என்றார்.

ஓமிக்ரான் தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிலைமை குறைவாகவே ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருந்தாலும், பொதுமக்கள் அதனை எளிதாக எண்ணி நடந்து கொள்ளக்கூடாது. மிக அதிக எண்ணிக்கையில் பாதிப்புகள் அதிகரிக்கும் போது, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க மக்கள், இப்போது விடுமுறை காலம் என்பதால் ஓமிக்ரான் மற்றும் கொரோனாவுக்கு எதிராக தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய விரும்புகின்றனர். இப்போதைய சூழ்நிலையில் ஒவ்வொருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியாது. அனைத்து மக்களுக்கும் பரிசோதனை செய்வதில் சில சிரமங்கள் உள்ளன. அந்த பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும் என்றும் ஆண்டனி பவுசி கூறியுள்ளார்

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!