நிகழ்வு

அமீரகத்தில் “தமிழ் பெண்கள் சங்கம்” புதிய நிர்வாகிகள் குழு தேர்வு

295views

துபாய் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற “தமிழ் பெண்கள் சங்கத்தின்” புதிய நிவாகிகள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் அண்மையில் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையொட்டி பர்துபாய் பகுதியில் பனோரமா ஓட்டலில் உள்ள ‘காப்பர் பாட்’ உணவகத்தில் அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்களாக , :
திருமதி சிவசக்தி ராமநாதன் – தலைவர்
திருமதி பார்வதி நாராயணன் – பொது செயலாளர்
திருமதி. தமிழரசி முத்துசாமி – பொருளாளர்
திருமதி. அஞ்சனா கேத்தி – கலை மற்றும் கலாச்சார செயலாளர்ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் திருமதி. பூர்ணிமா பாலாஜி, திருமதி சுவேதா கோபால் ஆகியோர் கமிட்டி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரபல வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆர்ஜே சாரா கலந்துகொண்டு தலைவியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருமதி சிவசக்தி ராமநாதன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளையும் , பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.

தமிழ் பெண்கள் சங்கம் அமீரகத்தில் இன்னும் பல சாதனை தருணங்களை செய்து மகளிர் மேம்பாட்டில் மிகுந்த அக்கறையுடனும், தன்னம்பிக்கையுடனும், துடிப்புடனும் செயல் புரிந்து வெற்றி நடைப்போட “நான் மீடியா” தன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!