தமிழகம்

அதிமுக பொதுக்குழு: எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொது செயலாளராக தேர்வு, கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்

74views

அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சென்னை வானகரத்தில் நடந்துவரும் அந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

“கழகப் பொதுச் செயலாளர் என்ற ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்ற கழகப் பொதுக்குழு உறுப்பினர்களுடைய பெரும்பான்மை முடிவின்படி, விதி எண். 20அ-வின்படி கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பு மீண்டும் கொண்டுவரப்பட்டு உள்ளதால், புதிய பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் ஒருவரை திருத்தப்பட்ட விதி எண். 20அ பிரிவு-7ன்படி பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட வேண்டி உள்ளது.கழகப் பொதுக்குழு உறுப்பினர்களால், கழக தலைமை நிலையச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை, கழக சட்ட திட்ட விதி 20அ பிரிவு 7ன்படி, இப்பொதுக்குழு கழக இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்து, நியமனம் செய்யப்படுகிறார் என்பதை ஏகமனதாக முடிவு செய்யப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இந்த தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வாசித்தார். தீர்மானத்தை கே.பி. முனுசாமி முன்மொழிவதாகவும் அவர் குறிப்பிட்டார். பொதுக்குழு உறுப்பினர்கள் கைதட்டி தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!