தமிழகம்

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் நடைபெற்ற ZOOFEST 2023

52views
நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி விலங்கியல் துறை, 07/03/2023 அன்று ZOOFEST”2023 என்னும் அறிவியல் சார்ந்த நிகழ்வை நடத்தியது.  இந்நிகழ்வில் மாநில அளவில் பல்வேறு கல்லூரி மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வு காலை 9:30 மணியளவில் தொடங்கப்பட்டது, மாலை 4:40 மணி அளவில் நிறைவு பெற்றது. இந்நிகழ்வின் முக்கிய நோக்கம் கல்லூரி மாணவர்களிடையே அறிவியல் பூர்வமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருந்தது.
முக்கிய தலைப்புகளான பூமி மாசுபடுதல், பருவ நிலை மாற்றம், வனம் அழிவதை தடுத்தல், வன விலங்குகள் பாதுகாப்பு, கழிவு நீரை சுத்தப்படுத்துதல், போன்றவை தொடர்பான ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்க பட்டன, மேலும் இந்நிகழ்வில் கட்டுரை எழுதுதல், வினாடி வினா, ரங்கோலி,போன்ற போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் மாநில அளவில் பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனர்.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ, ஆர், பொன். பெரியசாமி, கல்லூரி தலைவர் பொன்.பாலசுப்ரமணியன், கல்லூரி செயலர் பொன். ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர். எம், மீனாட்சி சுந்தரம், கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் நேரு நினைவு கல்லூரி சார்ந்த துரை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்ற கல்லூரியை சார்ந்த பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் முனைவர். எஸ். உமா மகேஸ்வரி, தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சி, மற்றும் முனைவர், எஸ், நித்திய தாரணி, காவேரி கல்லூரி, திருச்சி, முனைவர், எம், பிரதிப், முனைவர்,ந. வள்ளி, பி. ஜி விரிவாக்க மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பெரம்பலூர், கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி ஒருங்கிணைத்தனர்.
மொத்தம் 20 க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 150 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வில், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கபட்டன. இந்நிகழ்வில் எல்லா அறிவியல் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு அதிக பாய்ண்ட் வாங்கிய விலங்கியல் துறை சார்ந்த, தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சி மாணவ, மாணவிகள் சுழல் கோப்பையை மகிழ்ச்சியுடன் தட்டிச் சென்றனர். இக்கோபையை நேரு நினைவு கல்லூரி முதல்வர், ஏ, ஆர், பொன் பெரியசாமி, மற்றும் நேரு நினைவு கல்லூரி தலைவர். பொன் பாலசுப்பிரமணியன், செயலர் பொன் ரவிச்சந்திரன். ஒருங்கிணைப்பாளர் எம். மீனாட்சி சுந்தரம், மாணவ, மாணவியற்கு வழங்கினார்.
இந்நிகழ்வினை நேரு நினைவு கல்லூரி விலங்கியல் துறை சார்ந்த முனைவர் ந. ரமேஷ் மற்றும் முனைவர் அ. பூபதிராஜா பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏற்பாடு செய்தனர்.  மாநில அளவில் இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பெரிதும் பயன்பெற்றனர்.  இந்நிகழ்வு மாலை 4:30 மணிஅளவில் நிறைவு பெற்றது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!