தமிழகம்

யோகா விழிப்புணர்வு குறித்து 8 ஆயிரம் கிலோமீட்டர் 12 ஜோதிர் லிங்கம் சைக்கிள் யாத்திரை நிறைவு விழா – சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார வாழ்த்து

67views
யோகா குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த புனேவை சேர்ந்த சேர்ந்த பூஜா என்ற மாணவி சைக்கிளில் யாத்திரை மூலம் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கம் உள்ள ஸ்தலங்களில் மேற்கொண்டார்
கடந்த அக்டோபர் 8ம் தேதி கேத் தார்நாத் இருந்து புறப்பட்டு 8000 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் செய்து டிசம்பர் 31ஆம் தேதி ராமேஸ்வரம் வந்தடைந்தார்.அதனை தொடர்ந்து இன்று காலை மதுரை வந்தார் தனது சைக்கிள் யாத்திரை பயணத்தை நிறைவு செய்தபோது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் பூஜாவை பாராட்டி பொன்னாடை அணிவித்து அவருக்கு நினைவு பரிசினை வழங்கினார். அவருடைய பயிற்சியாளர் சமீர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ்.சரவணன், கே.தமிழரசன், ரோட்டரி துணை ஆளுநர் ரவி பார்த்தசாரதி, மதுரை அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு ஆகியோர் பங்கேற்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!