தமிழகம்

ராமநாதபுரத்தில் உலக கழிப்பறை தின தூய்மை ஓட்டம் வென்றோருக்கு பரிசு

181views
உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தூய்மை ஓட்டம் நடந்தது. சீதக்காதி சேதுபதி விளையாட்டு திடலில் நடந்த ஓட்ட போட்டிக்கு மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை தொடங்கி வைத்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ம.காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி கே.ஜெ.பிரவீன் குமார், உதவி வன பாதுகாவலர் கணேசலிங்கம், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
தூய்மை ஒட்டம் 18 வயதிற்குட்பட்டோர் மகளிர் பிரிவில் ராமநாதபுரம் கொழும்பு ஆலிம் நினைவு உயர்நிலைப்பள்ளி மாணவி ட்டி.மௌனிகா, நேஷனல் அகாடமி (சிபிஎஸ்இ) பள்ளி மாணவி எஸ்.பிரதிக்ஷா, உத்திரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி குண பாரதா, 18 வயதிற்கு மேற்பட்டோர் மகளிர் பிரிவில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் அரபி மேல்நிலைப் பள்ளி மாணவி ட்டி.அனிதா, அறிஞர் அண்ணா நடுநிலை பள்ளி மாணவி எஸ்.தயாநிதி ஶ்ரீ, உத்திரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவி எம்.சுவாதி ஆகியோர் முதல் மூன்றிடம் பிடித்தனர்.
18 வயதிற்குட்பட்டோர் ஆடவர் பிரிவில் டி.சங்கிலி ஏ. தினேஷ், எஸ்.ஷமீம் அஹமது, 18 வயதிற்கு மேற்பட்டோர் ஆடவர் பிரிவில் கே.ராமர், ஆர்.பிரஷாந்த், இ.வசந்த் ஆகியோர் முதல் மூன்றிடம் பிடித்தனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!