தமிழகம்

அண்ணா பல்லை 16 வது மண்டல அளவிலான மகளிர் வாலிபால் போட்டி மதுரை, காரைக்குடி அணிகள் அசத்தல்

54views
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரி உடற்கல்வி துறை சார்பில் அண்ணா பல்லை 16 வது மண்டல அளவிலான மகளிர் வாலிபால் போட்டி நடந்தது. கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி, மதுரை வைகை பொறியியல் கல்லூரி, காளையார்கோவில் செயின்ட் மைக்கேல் பொறியியல் கல்லூரி, மதுரை மங்கையர்க்கரசி பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி, மதுரை கே எல் என் பொறியியல் கல்லூரி, புதுக்கோட்டை செந்தூரான் பொறியியல் கல்லூரி, மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி ஆகிய அணிகள் பங்கேற்றன. மதுரை தியாகராஜர் காலேஜ் ஆப் டெக்னாலஜி, காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி, மதுரை வைகை பொறியியல் கல்லூரி அணிகள் முதல் மூன்றாம் இடம் பிடித்தன. கல்லூரி துணை முதல்வர் செந்தில்குமார் வழங்கினார். கல்லூரி திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திராவிட செல்வி வரவேற்றார்.
உடற்கல்வி ஆசிரியர்கள் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி ரமேஷ் பாபு, கும்பரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆர்தர் சாமுவேல், மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளி ரமேஷ், வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி ராஜன், மேதலோடை நாடார் மகாஜன சபை உயர்நிலைப்பள்ளி தினகரன் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர். முகமது சதக் பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!