தமிழகம்

மதுரை வாடிப்பட்டி அருகே குடிநீர் குழாயில் உடைப்பு தொற்றுநோய் பரவும் அபாயம்

70views
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ராமையம்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த இரண்டு மாத காலமாக தண்ணீர் வீணாகி வருகிறது.
இதன் காரணமாக அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் செல்கின்றனர்.
வீணாகும் தண்ணீரில் சிறு குழந்தைகள் விளையாடுவதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இது குறித்து பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டபோது அது காவேரி கூட்டு குடிநீர் திட்டம் அதனை அந்தத் துறையினர் தான் வந்து சரி செய்ய வேண்டும் ஊராட்சி நிர்வாகத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று தட்டிக் கழிக்கின்றனர்.
குடிநீர் குழாய் உடைப்பிலிருந்து வெளியேறும் நீரால் சாலையில் ஓடும் கழிவுநீர் உள்ளே புகுந்து தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் இதன் காரணமாக.அந்தப் பகுதி முழுவதும் சுகாதாரம் கேள்விக்குறியதாகி வருகிறது என்பதை சம்பந்தப்பட்ட துறையினர் உணர்ந்து விரைவில் சரி செய்யப்பட வேண்டும். என்று அந்த பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!